பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கண்ணன், கொள்கை பரப்பு செயலாளர் செந்தில்குமார், மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிடப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநகர மாவட்ட செயலாளர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் குமரவேல், ராஜ்குமார், பழனிவேல், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story