கர்நாடகத்தில் புதிதாக 1365 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் 1,365 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 16 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 33 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்தனர்.
இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,558 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 74 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. 21 ஆயிரத்து 266 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 327 பேர், தட்சிண கன்னடாவில் 268 பேர், மைசூருவில் 123 பேர், உடுப்பியில் 97 பேர், சிக்கமகளூருவில் 47 பேர், துமகூருவில் 52 பேர், சிவமொக்காவில் 45 பேர், உத்தரகன்னடாவில் 51 பேர், குடகில் 86 பேர், ஹாசனில் 107 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகா், பெலகாவி, பெங்களூரு புறநகர், உடுப்பி, உத்தரகன்னடாவில் தலா 2 பேரும், தட்சிண கன்னடா, மைசூருவில் தலா 3 பேரும் என மொத்தம் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story