108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை


108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை
x
தினத்தந்தி 19 Aug 2021 6:48 AM IST (Updated: 19 Aug 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் இருந்து கமல்ராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 32) என்ற நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் ஒன்று பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தது. மேலமாத்தூர் கிராமம் அருகே சென்ற போது முத்துலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த அவசர கால மருத்துவ நுட்புனர் செல்வகுமார் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தச் சொல்லி வாகன டிரைவர் ஆனந்தன் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது முத்துலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.


Next Story