சாலை விபத்தில் இறந்த அனல்மின் நிலைய அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


சாலை விபத்தில் இறந்த அனல்மின் நிலைய அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 6:48 AM IST (Updated: 19 Aug 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் இறந்த அனல்மின் நிலைய அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

மேட்டூர்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் செந்தில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூர் ராமன் நகர் பகுதியில் சென்ற போது லாரி மோதி பலியானார். இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் மனைவி அம்பிகா தனது குடும்பத்திற்கு நஷ்டஈடு தொகையாக ரூ.1 கோடியே 35 லட்சம் வழங்க வேண்டும் என மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீ்ர்ப்பு கூறப்பட்டது. இதில், விபத்தில் பலியான செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நஷ்டஈட்டு தொகையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 17 ஆயிரத்து 75-ம், அந்த தொகைக்கு 7.5 சதவீத வட்டியும் சேர்த்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி தயாநிதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story