லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Aug 2021 6:48 AM IST (Updated: 19 Aug 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

பனவடலிசத்திரம்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா மகன் கருப்பசாமி (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் பனவடலிசத்திரம் அருகே உள்ள பலபத்திரராமபுரம் ஊருக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மேலநீலிதநல்லூர் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த பரதராஜன் என்பவருடைய மகன் செந்தில்குமாரை கைது செய்தனர்.

Next Story