பொள்ளாச்சி சரகத்தில் 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா
பொள்ளாச்சி சரகத்தில் குற்றங்களை தடுக்க 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சரகத்தில் குற்றங்களை தடுக்க 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
பொள்ளாச்சி போலீஸ் சரகத்தின் கீழ் நகர கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சி நகரம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சின்னாம்பாளையத்தில் அடுத்தடுத்த கடைகளில் திருட முயற்சி நடைபெற்றது.
இந்த நிலையில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செவ்வநாகரத்தினம் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் பொள்ளாச்சி சரக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
200 இடங்கள்
பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலைய எல்லைகளில் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கிழக்கு போலீஸ் நிலைய பகுதிகளில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளேஸ்வரன்பட்டி, அழகப்பா லே-அவுட், ஜோதி நகர் ஏ காலனி பகுதிகளில் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதுபோன்று மற்ற போலீஸ் நிலைய பகுதிகளிலும் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விரைவில் பொள்ளாச்சி நகரம் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகள், வீதிகள் கண்காணிப்ப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய கேமராக்கள் பெரிதும் உதவி புரிகின்றன. மேலும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குடியிருப்பு பகுதிகளில் கேமராக்களை பொருத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story