கோவளம் அருகே மீனவர்கள் படகு நடுக்கடலில் தீப்பிடித்தது; கடலோர காவல் படையினர் 10 பேரை மீட்டனர்


கோவளம் அருகே மீனவர்கள் படகு நடுக்கடலில் தீப்பிடித்தது; கடலோர காவல் படையினர் 10 பேரை மீட்டனர்
x
தினத்தந்தி 19 Aug 2021 1:39 PM IST (Updated: 19 Aug 2021 1:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் சென்று கோவளம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று விசைப்படகின் என்ஜின் அறையில் உள்ள மின்சார சாதனங்களில் திடீர் தீப்பற்றியது.

கரும்புகையுடன் தீ எரியத் தொடங்கியது. படகில் இருந்த மீனவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.இது பற்றி மீனவர்கள் அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த மற்ற மீனவர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடலோர காவல் படையினர் தங்களது ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் தீப்பற்றிய விசைப்படகில் தவித்து கொண்டிருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். விசைப்படகில் பற்றிய தீயையும் அணைத்தனர். இதைத் தொடர்ந்து விசைப்படகுடன், மீனவர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Next Story