திருவள்ளூர் அருகே டெம்போ மோதி முதியவர் பலி
திருவள்ளூர் அருகே டெம்போ மோதி முதியவர் பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் ஒண்டிகுப்பம் சாலையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது மணவாளநகரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த டெம்போ ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இறந்தவர் யார் ? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து மணவாளநகர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) டில்லிபாபு மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story