கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 19 Aug 2021 4:59 PM IST (Updated: 19 Aug 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து சத்தம் கேட்கவே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். 

டாஸ்மாக் கடையின் முன்பக்க இரும்பு கிரில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து உள்ள இரும்பு கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் கடையின் மேலாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கடைக்கு வேறு ஒரு பூட்டு போடப்பட்டது. 

இதே கடையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பின்பக்க சுவரை கடப்பாரையால் துளையிட்டு மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story