கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2021 5:07 PM IST (Updated: 19 Aug 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு காளியம்மன் கோவில் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி காலி சிலிண்டருடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, நகர குழு உறுப்பினர்கள் முருகன், அந்தோணி செல்வம், முன்னாள் நகர செயலாளர் ராமசுப்பு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story