பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்
திருவண்ணாமலையில் உள்ள குண்டும், குழியுமாக சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள குண்டும், குழியுமாக சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலை
திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாவாஜி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மண் கொட்டப்பட்டதை அடுத்து சாலை அமைக்கும் பணி முழுமையாக நடைபெறவில்லை என்று தெரிகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது சிரமத்திற்கு உள்ளாவதாகவும், மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நாற்று நடும் போராட்டம்
குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பாவாஜி நகர் 1-வது தெருவில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் இன்று சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story