காஞ்சீபுரம் அருகே 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது


காஞ்சீபுரம் அருகே 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 19 Aug 2021 5:58 PM IST (Updated: 19 Aug 2021 5:58 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி கரை பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியபோது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து லாரியை குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லாரியுடன் அரிசியை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story