பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு


பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 19 Aug 2021 6:08 PM IST (Updated: 19 Aug 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ஸ்டண்ட் மாஸ்டர்

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் (வயது 92). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.

3 தலைமுறையாக நடிகர்களுக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், பிரேம்நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து தரப்பு கதாநாயகர்கள் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து உள்ளார். நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

தற்போது வயது மூப்பின் காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி ஜூடோரத்தினம் சென்னையில் திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி உள்ளார்.

வெள்ளிப்பொருட்கள், பணம் திருட்டு

இந்த நிலையில் நேற்று இரவு ஜூடோ ரத்தினத்தின் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவரின் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து உடனடியாக குடியாத்தத்தில் உள்ள அவரது மகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

 குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிச்சாண்டி, முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையறிந்து இன்று காலை குடியாத்தம் திரும்பிய ஜூடோரத்தினம், வீட்டில் 15 விலை உயர்ந்த பட்டுசேலைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த 2 ரோலக்ஸ் கைக்ெகடிகாரங்கள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போய் இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி  வருகின்றனர்.

இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story