மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing jewelry

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் புதுநகர் டேரி பூ தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26), இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றார்.

நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4¾ பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பிரகாஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
2. திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
3. வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு