போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 19 Aug 2021 6:50 PM IST (Updated: 19 Aug 2021 6:50 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.

திருவண்ணாமலை நகரத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் கடந்த 16-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதத்தில் வரும் முதல் சுபமுகூர்த்த நாள் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது. 

இதனால் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க இன்று காலை திருவண்ணாமலை நகர பகுதியில் முக்கிய கடை வீதியில் குவிந்தனர். 

இதனால் திருவண்ணாமலை தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. 

தேரடி வீதியில் கடலைக்கடை சந்திப்பு பகுதியில் இருந்து காந்தி சிலை வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

 மேலும் காலை 11 மணியளவில் இருந்து  1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். 

இதேபோல் அப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story