பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 19 Aug 2021 6:52 PM IST (Updated: 19 Aug 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, கடைவீதி, வைகை அணை சாலை, பாலக்கோம்பை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நேற்று காரில் வந்த ஒருவர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் பணியாளர்கள் அவரை பிடித்து விசாரணை செய்தனர். 
இதில் அவர் கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story