பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 24 பேர் கைது


பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 24 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2021 7:00 PM IST (Updated: 19 Aug 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம்:
கம்பம் அரசு மருத்துவமனையை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகரத்தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். கம்பம் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும், அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும், நோயாளிகளை தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதை தவிர்த்து கம்பம் அரசு மருத்துவமனையிலேயே அனைத்து சிகிச்சைகளும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இது குறித்து தகவலறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி கம்பம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 24 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story