மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வேலூரில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
வேலூரில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் ஓல்டுடவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42), ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று வேலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
சிறிதுநேரத்துக்கு பின்னர் வந்தபோது ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.
அதையடுத்து ஏழுமலை மற்றும் அவருடைய நண்பர்கள் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வேலூர் நகரம் முழுவதும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். வேலூர் நேஷனல் சிக்னல் அருகே வாலிபர் ஒருவர் ஏழுமலையின் மோட்டார் சைக்கிளை தள்ளி சென்று கொண்டிருந்தார்.
இதைக்கண்ட ஏழுமலையின் நண்பர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அஜய் (24) என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் வழக்குப்பதிந்து அஜயை கைது செய்தார்.
Related Tags :
Next Story