நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Aug 2021 7:55 PM IST (Updated: 19 Aug 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
51 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 2 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 170 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 221 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 51 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 461 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்தது. 
இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 236 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 523 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story