10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
ஊத்துக்குளி அருகே 10 ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.
காங்கேயம்
ஊத்துக்குளி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). டிரைவர். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் மாணவியை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது பற்றி மாணவியிடம் கேட்டனர். அப்போது மணிகண்டனுடன் நெருங்கி பழகியதாக தெரிவித்தார்.
போக்சோவில் கைது
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து மணிகண்டனை உடனடியாக கைது செய்து மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story