ஹெல்மெட் அணியாத 50 பேருக்கு அபராதம்


ஹெல்மெட் அணியாத 50 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:28 PM IST (Updated: 19 Aug 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமை தாங்கி, ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே கலெக்டர் அலுவலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதுடன் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து பாதைகள் முன்பும் இரும்பு தடுப்புகள் (பேரிகார்டுகள்) வைக்கப்பட்டு அங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் ஹெல்மெட் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story