மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 9:34 PM IST (Updated: 19 Aug 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

வேலூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூரை அடுத்த ஏ.கட்டுபுடி பகுதியை சேர்ந்த இருதயராஜ் மனைவி பாலம்மாள் (வயது 47), கூலிதொழிலாளி. 

இவர் இன்று மதியம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்க தனது மகன் ஆல்பர்டுடன் (24) மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். 

துத்திப்பட்டில் இருந்து இடையன்சாத்துக்கு செல்லும் இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்மநபர்களில் ஒருவன் திடீரென பாலம்மாள் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தான். 

அதனால் அதிர்ச்சி அடைந்த பாலம்மாள் மற்றும் ஆல்பர்ட் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர்.

 அதற்குள் அவர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பாலம்மாள் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்தார். 

மேலும் துத்திப்பட்டு, இடையன்சாத்து பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story