புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2021 9:41 PM IST (Updated: 19 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே எரியோடு பஸ் நிலையம், அய்யலூர் சாலை, வைவேஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அங்குள்ள 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் உரிமையாளர்கள் முனியப்பன் (வயது 34), பாண்டியன் (53), ஆனந்தன் (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,200 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story