கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:46 PM IST (Updated: 19 Aug 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

திண்டுக்கல் : 

சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சில்வார்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதனை திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது மாவட்ட கவுன்சிலர் விஜயன், சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றியகுழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், வி.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் சுமார் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story