ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
முகரம் பண்டிகை குறித்து போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆற்காடு
முகரம் பண்டிகை குறித்து போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
முகரம் பண்டிகைையயொட்டி ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் முஸ்லிம்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பங்கேற்று ேபசுகையில், கொரோனா பரவலை தடுக்க முகரம் பண்டிகையில் ஆங்காங்கே பஞ்சா வைத்து வழிபாடு செய்தல், ஊர்வலங்கள் செல்லுதல், தீமிதி திருவிழா நடத்தல், மக்கள் கூட்டமாக கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனப் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் இஸ்லாமிய பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தீபாசத்யன் பதவி ஏற்றதும் முதல் முதலில் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அங்கு வழக்குப்பதிவு குறித்த கோப்புகளை பார்வையிட்டார்.
மேலும் காவலர் உடற்பயிற்சி கூடத்தைப் பார்வையிட்டார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) தனுசியா, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
-
Related Tags :
Next Story