கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு


கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 10:05 PM IST (Updated: 19 Aug 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கோவை

கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா  பரவல் அதிகரித்தது. எனவே கொரோனா பரிசோதனை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை செல்வபுரம் 78 -வது வார்டு ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே நாடார் வீதியில் ஒரு சாக்குப்பை கிடந்தது. அதில், கொரோனா சளி மாதிரி பரிசோதனைக்கு பயன்படுத்தப்ப டும் புதிய ஊசிகள் இருந்தன. 

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். 

அதில் பயன்படுத்தப்படாத சளி மாதிரி பரிசோதனை செய்யும் ஊசிகள் இருந்தது உறுதியானது. அதில், 300-க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்தன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றினர். 

கொரோனா பரிசோதனை உபகரணங்களை சாக்குப்பையில் கட்டி வீசியவர்கள் யார் என்பது குறுித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் பயன்படுத்தப்படாத கொரோனா உபகரணங்கள் பொது இடத்தில் வீசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story