தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பலி
x
தினத்தந்தி 19 Aug 2021 10:11 PM IST (Updated: 19 Aug 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான செடிகள் வளர்க்கும் தோட்டம் கம்பிகொல்லை பகுதியில் உள்ளது. 

இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த காசிமணி (வயது 55) என்பவர் தோட்ட காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று காசிமணி அங்குள்ள தரைதொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருந்தார் 

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காசிமணி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். 

உடனடியாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வந்து பார்த்தனர். அப்போது காசிமணி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கூறினர். இதையடுத்து வன ஊழியர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காசிமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story