காதல் ஜோடி தஞ்சம்


காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 19 Aug 2021 10:15 PM IST (Updated: 19 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை போலீசில் காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.

வடமதுரை : 

வடமதுரை அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). இவர், பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரியா (19). இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினா்.



பின்னர் வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு இருவரும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story