சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம்- மளிகை பொருட்கள் கொள்ளை


சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம்- மளிகை பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 19 Aug 2021 10:23 PM IST (Updated: 19 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம். (வயது 33). என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க ராஜசெல்வம் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல அருகில் உள்ள இரும்பு கடையை உடைத்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு, துணியால் மறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு் சம்பவங்களில் வடநாட்டு திருடர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story