10 பவுன் நகையுடன் மணப்பெண் மாயம்
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் 10 பவுன் நகையுடன் மணப்பெண் திடீரென மாயமானார்.
அணைக்கட்டு
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் 10 பவுன் நகையுடன் மணப்பெண் திடீரென மாயமானார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வசந்தநடை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 19 வயது மகள் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான அவரது தாய் மாமனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற இருந்தது.
இதை முன்னிட்டு நேற்று பெண் வீட்டார் திருமண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இரவு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு பெண் வீட்டார் எழுந்து மணப்பெண்ணை பார்க்கும் போது மணப்பெண் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் மணப்பெண்ணுக்கு போட வைத்திருந்த 10 பவுன் நகையுடன் மணப்பெண் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் பெண்ணிடம் இருக்கும் செல்போன் எந்த டவர் உள்ள இடத்தை காட்டுகிறது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story