பொள்ளாச்சி நகராட்சி மூலம் 41,342 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பொள்ளாச்சி நகராட்சி மூலம் 41,342 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Aug 2021 11:13 PM IST (Updated: 19 Aug 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி மூலம் 41 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி மூலம் 41 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு முகாம்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம், காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குமரன் நகர் மற்றும் வடுகபாளையம் நகராட்சி பள்ளிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

 இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தொடங்கிவைத்து பார்வையிட்டார். மேலும் வரிசையில் நிற்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

31,573 பேருக்கு பரிசோதனை

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக வார்டு, வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று 1, 2 மற்றும் 23-வது வார்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒரே நாளில் 2,500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பொள்ளாச்சி நகராட்சி மூலம் இதுவரைக்கும் 41 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதை தவிர கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா 2-வது அலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்கும் 2,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,985 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 

26 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். தற்போது 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வீடு, வீடாக மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 31 ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story