மூலனூர் கொள்முதல் நிலையத்திற்கு முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு
மூலனூர் கொள்முதல் நிலையத்திற்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.
மூலனூர்
மூலனூர் கொள்முதல் நிலையத்திற்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.
முருங்கைக்காய் சாகுபடி
மூலனூர் கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் நிலையங்களுக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக் காய்களை கொண்டு வருகிறார்கள். மேலும் மோகனூர் பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர். மேலும் முருங்கைக்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கொள்முதல் அவற்றை பிறமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக வடமாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்ய வரவில்லை.
மேலும் மூலனூர் பகுதிகளில் விளைச்சல் அதிகமானதால் கடந்த இரண்டு வாரங்களாக வரத்து அதிகமாகி விலை குறைந்துள்ளது.
விலை குறைவு
கடந்த வாரம் ரூ. 30- க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் ஒரு கிலோ இந்த வாரம் ரூ. 25- க்கும், மரம் முருங்கை ரூ. 24-க்கும், கரு முருங்கை ரூ. 26 க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த வாரம் சுமார் 10 டன் முருங்கையை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story