லாரி மோதி குன்னூர் வாலிபர் பலி


லாரி மோதி குன்னூர் வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2021 11:45 PM IST (Updated: 19 Aug 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே லாரி மோதி குன்னூர் வாலிபர் பலியானார்.

இடிகரை,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 30). இவர் தன்னுடைய நண்பர் பிரேம்குமார் (36) என்பவருடன் குன்னூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவையில் உள்ள வடமதுரையில் நாய் வாங்க வந்தார். 

பின்னர், இருவரும் திரும்பி குன்னூருக்கு புறப்பட்டனர். பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் பள்ளியின் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட ரவிச்சந்திரன் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து இருந்த பிரேம்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கபாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த பாலக்காட்டை சேர்ந்த ரியாஷ்மோகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story