மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.
உருளைக்கிழங்கு மண்டி
மேட்டுப்பாளையம் காந்தி மைதானம், நெல்லித்துறை ரோடு, ஒலியுல்லா வீதி ஆகிய பகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நேற்று மண்டிகளுக்கு ஊட்டியில் இருந்து 39 லோடு உருளைக்கிழங்கும், குஜராத்தில் இருந்து 25 லோடும், ஹாசனில் இருந்து 15 லோடும் என மொத்தம் 79 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது.
ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1150 வரையும், குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.750 வரையும், ஹாசன் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.950 வரையும் விற்பனையானது.
விலை வீழ்ச்சி
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி நேற்றைய மார்க்கெட்டுக்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை இதன் காரணமாக ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் வெளிமாநில உருளைக் கிழங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.
மேலும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கடந்த ஒரு வாரமாக தினசரி 13 டன் வீதம் உருளைக்கிழங்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வெள்ளைப் பூண்டு
ஓணம் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள வெள்ளைப்பூண்டு மண்டிகளில் நேற்று ஏலம் நடைபெற்றது. மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15,000 மூட்டை வெள்ளைப்பூண்டு விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.130 வரை விற்பனை ஆனது.
Related Tags :
Next Story