புதுக்கோட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் ஆணையர் நடவடிக்கை
புதுக்கோட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
வாடகை பாக்கி
புதுக்கோட்டை நகராட்சி வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கியை வசூலித்து வருகிறது. இதில் அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நகராட்சி ஆணையர் நாகராஜன் அறிவுறுத்தலின் பேரில், வருவாய் ஆய்வாளர் காந்தி, நயினா முகமது, பரகத் மற்றும் புதுக்கோட்டை போலீசார் உதவியுடன் சந்தப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
2 கடைகளுக்கு `சீல்’
இதில் அதிக நாட்களாக வாடகை செலுத்தாமல் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வரை பாக்கி வைத்திருந்த 2 கடைகளை பூட்டி `சீல்' வைக்கப்பட்டது. பின்னர் கடையின் முன்பு அறிவிப்பு பேனர்களையும் வைத்து சென்றனர்.
இதேபோல் சந்தைப்பேட்டை பகுதியில் மேலும் சில கடைகளில் மின்சார இணைப்பை துண்டித்து உடனடியாக பாக்கி தொகை கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நகராட்சிக்கு முறையாக வரி செலுத்தாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story