மல்லிகைப்பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை
முகூர்த்த நாளையொட்டி திருப்பூரில் நேற்று பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்
முகூர்த்த நாளையொட்டி திருப்பூரில் நேற்று பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ விலை கிடுகிடு உயர்வு
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று சுப முகூர்த்த நாளாக இருந்த காரணத்தால் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்றும் சுபமுகூர்த்த நாளாக இருப்பதுடன் வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருவதால் நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
மல்லிகைப்பூ ரூ.2000
நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ ரூ.1000-கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரேயடியாக விலை உயர்ந்து கிலோ ரூ.2000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1000, ஜாதிமல்லி ரூ.600, சம்பங்கிப்பூ ரூ.300, அரளி ரூ.280, பட்டுப்பூ ரூ.150, ரோஜா ரூ.300, செவ்வந்தி ரூ.240 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக சத்தியமங்கலம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் கர்நாடக மாநிலத்திற்கு அதிகமாக விற்பனையானதால் திருப்பூரில் பூக்களின் விலை அதிகமாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அனைத்து வகை பூக்களும் சுமார் 10 டன் அளவில் விற்பனையாகின.
Related Tags :
Next Story