முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2021 12:22 AM IST (Updated: 20 Aug 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

கரூர்,
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தபால் அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் அன்ஸ்கில்டு சங்கம் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சருக்கு தங்களுடைய கோரிக்கைகளை தபால் மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
இதற்கு வட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில துணைதலைவர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் வெங்கடேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு முதல்-அமைச்சருக்கு தங்களது கோரிக்கைகளை தபால் மூலம் அனுப்பினர்.
விபத்துபடி வழங்க வேண்டும்
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- 
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 1.7.2021-ம் ஆண்டு முதல் அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் விபத்துபடி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கைகளை அனுப்பி வைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story