இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல்- 2 பேர் கைது; 5 பேர் மீது வழக்கு


இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல்- 2 பேர் கைது; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Aug 2021 12:26 AM IST (Updated: 20 Aug 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரவக்குறிச்சி,
முன்விரோதம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 42). இவருக்கும் அருகே வசிக்கும் பழனிச்சாமி என்பவருக்கும் கோழி வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
இந்தநிலையில் கோழி வீட்டுக்குள் சென்றது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
2 பேர் கைது
இந்த தாக்குதலில் கதிர்வேலின் மனைவி விஜயாவுக்கு (35) தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது கணவர் கதிர்வேல் அளித்த புகாரின்பேரில் பழனிச்சாமி, அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு மகன் நித்தீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் நித்தீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கதிர்வேல், லோகநாதன், விஜயா, பெருமாள் ஆகியோர் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story