பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 20 Aug 2021 12:41 AM IST (Updated: 20 Aug 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்தது.

நெல்லை:

நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதத்தில் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற தொடங்கி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி பூஜை மற்றும் நாளை அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் குவிந்தனர். இதனால் பூக்களின் விலை  கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.500-க்கு விற்றபனையான மல்லிகை பூ நேற்று காலையில் ரூ.1,000-க்கும், மதியம் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
இதேபோல் கிலோ ரூ.600-க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. சம்பங்கி ரூ.200-ல் இருந்து ரூ.520 ஆகவும், பன்னீர் ரோஸ், அரளி பூக்கள் ரூ.250-க்கும் விற்கப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் வழக்கத்தை விட சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Next Story