காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 20 Aug 2021 12:52 AM IST (Updated: 20 Aug 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

சமயபுரம்
சிவகாசியை சேர்ந்த ஸ்ரீதர் மகள் நிரஞ்சனாதேவி (வயது 21). பி. இ.படித்துள்ள இவரும் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தங்கப்பாண்டி மகன் மாரியப்பனும்(22)(இவரும் பி.இ. முடித்துள்ளார்) காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கே தங்கள் காதலை பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்று பயந்து நேற்று காலை சமயபுரம் வந்து மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், ராஜசேகரன் ஆகியோர் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மணமகனின் பெற்றோர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Next Story