ரூ.85 ஆயிரம் புகையிலை பொருட்கள்-கார் பறிமுதல்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 20 Aug 2021 1:02 AM IST (Updated: 20 Aug 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

ரூ.85 ஆயிரம் புகையிலை பொருட்கள்-கார் பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூர்
 திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு உத்தரவின்பேரில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் மற்றும் குழுவினர் துறையூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு மளிகைக் கடையில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு சுமார் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மளிகைக் கடையின் உரிமையாளர் மனோகரன் (வயது 55), அவரது மகன் கார்த்திக் (30) ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களது மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதேபோல, தா.பேட்டை பகுதியில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தா.பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் (45), ராஜா (38), செந்தில் (45), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story