மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Aug 2021 1:03 AM IST (Updated: 20 Aug 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

வத்திராயிருப்பு,
கூமாப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கூமாபட்டி நெடுங்குளத்திலிருந்து விராகசமுத்திரம் கண்மாய் பகுதிக்கு செல்லும் ஓடையில் அமைச்சியார்புரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 22) என்பவர் அனுமதியின்றி  மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தார். 

Next Story