ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர்.
திருவெறும்பூர்
கொள்ளை முயற்சி
திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனி உள்ளது. இப்பகுதியில் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தப்பி ஓட்டம்
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபர்களை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story