கும்பகோணத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டம்
பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி கும்பகோணத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி கும்பகோணத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழுதடைந்த சாலைகள்
கும்பகோணம் நகரத்தின் மைய பகுதியாக உள்ள பாணாதுறை கீழ வீதி, மேல வீதி, சன்னதி தெரு, வடக்கு வீதி மற்றும் 8-வது வார்டு பத்துக்கட்டு தெரு ஆகிய இடங்களில் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட மேம்பாட்டு பணிகளுக்காக பள்ளம் தோண்டியது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. இந்த சாலைகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பல மாதங்கள் ஆகியும் சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இ்ந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகி்ன்றனர். சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நாற்று நடும் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரியும், நகராட்சி நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் நேற்று பழுதடைந்த சாலைகளில் தேங்கிய மழை தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்
விரைவில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story