சிவகாசி சகோதரிகளுக்கு தங்கப்பதக்கம்
சிலம்ப போட்டியில் சிவகாசி சகோதரிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரிநகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள்கள் அஸ்வினி ப்ரியா (வயது 16), ஹேமலதா (14). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். சகோதரிகள் இருவரும் அதே பகுதியில் சிலம்பம் பயிற்சி அளித்து வரும் பிரபாகரன் என்பவரிடம் கடந்த சில வருடங்களாக சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அவ்வப்போது மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தனிப்பிரிவுகளில் அஸ்வினி ப்ரியாவும், ஹேமலதாவும் தங்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்கள் இருவரும் அடுத்து நேபாளில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
Related Tags :
Next Story