கழுத்தை நெரித்து தொழில் அதிபர் கொலை
சிவகாசியில் கழுத்தை நெரித்து தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் கழுத்தை நெரித்து தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 39). இவருக்கு பூலோகலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்த சந்தனகுமார் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி ெசல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிச்ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனது உறவினரிடம் கூறி கணவரை தேட சொன்னார்.
கண்மாயில் பிணம்
இந்த நிலையில் திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஈஞ்சார் கண்மாய் வடக்கு பகுதியில் கழுத்து இறுக்கப்பட்ட காயத்துடன் சந்தனகுமார் பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து திருத்தங்கல் போலீசாருக்கு சந்தனகுமாரின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிவகாசி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
6 பேர் கைது
கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். சந்தனகுமார் செல்போனில் கடைசியாக யார்-யார்? பேசி இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர்.
அதன்பேரில் சோனைக்குமார் (29) என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சந்தனகுமார் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் சோனைக்குமாரை கைது செய்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய கூட்டாளிகள் அசோக் (25), சதீஷ்குமார் (21), செந்தில்குமார் (23), பழனிக்குமார் (25), சுரேஷ்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 6 வாலிபர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில்தான் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story