மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு


மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி  5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 1:55 AM IST (Updated: 20 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி பெருமாள் பிள்ளை (வயது 74). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார்.
 அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெருமாள் பிள்ளையிடம் முகவரி கேட்பது போல் அருகில் வந்தனர். பின்னர், திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பெருமாள்பிள்ளையின் முகத்தில் தூவினர். இதை சற்றும் எதிர்பாராத அவர் அலறி துடித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள், பெருமாள் பிள்ளையின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிஓடி விட்டனர். 
வலைவீச்சு
பின்னர் இதுகுறித்து பெருமாள்பிள்ளை பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story