நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்துடன் பஸ் நிறுத்த நிழற்குடையில் தஞ்சம்
நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்துடன் பஸ் நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்தார்.
ஜெயங்கொண்டம்:
பஸ் நிறுத்த நிழற்குடையில் தஞ்சம்
திருச்சி உறையூரை சேர்ந்தவர் சங்கர்(வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு வந்து, அங்கு குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கீதா (35) என்ற மனைவியும், சபரிவாசன் (13) என்ற மகனும் உள்ளனர். சபரிவாசன் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கர், கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை ேநாய் காரணமாக வாத நோய் ஏற்பட்டு வலது கையும், வலது காலும் செயலிழந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் உண்ண உணவின்றி, வாடகை கொடுக்க பணமுமின்றி சிரமப்பட்டு வந்த அவர், வேறுவழியின்றி வீட்டை காலி செய்துவிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் மனைவி, மகனுடன் தஞ்சமடைந்தார். அங்கு அவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
கோரிக்கை
தற்போது 3 பேரும் உணவுக்காக சிரமப்பட்ட நிலையில், பிச்சை எடுக்காமல் உழைத்து உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் கீதா வீட்டு வேலைக்கு சென்று தனது கணவர் மற்றும் மகனை காப்பாற்றி வருகிறார்.
Related Tags :
Next Story