காட்டுயானைகளை கண்காணிக்க சிறப்பு குழு
காட்டுயானைகளை கண்காணிக்க சிறப்பு குழு
கூடலூர்
கூடலூர் கோட்டத்துக்கு உட்பட்ட நாடுகாணி, தேவாலா வனச்சரக பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவை இரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக தேவாலா அட்டிப்பகுதியில் மளிகை கடைகளை காட்டுயானைகள் உடைத்தன. மேலும் ஆமைகுளம், புளியம்பாரா, கோழிக்கொல்லி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை சேதப்படுத்தின.
இதை தடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் காட்டுயானைகள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்படி நாடுகாணி, தேவாலா வனச்சரக பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுயானைகளை கண்காணித்து விரட்டியடிக்கும் பணிக்கு 18 பேர் கொண்ட சிறப்பு குழுவை வனத்துறையினர் நியமித்து உள்ளனர். இக்குழுவினர் நாடுகாணி, தேவாலா பகுதியில் இரவு-பகலாக ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story