பெசன்ட் நகரில் பட்டப்பகலில் துணிகரம்; வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை


பெசன்ட் நகரில் பட்டப்பகலில் துணிகரம்; வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 20 Aug 2021 12:39 PM IST (Updated: 20 Aug 2021 12:39 PM IST)
t-max-icont-min-icon

பெசன்ட் நகரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

உறவினர் வீட்டுக்கு சென்றார்
சென்னை பெசன்ட்நகர் 30-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் ஹரி (வயது 70). இவர், நேற்று காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டு கிரில்கேட் கதவை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

50 பவுன் கொள்ளை
வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பட்டப்பகலில் இந்த கொள்ளைச்சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story